"குறும்பலாப்பேரி" என வர
பெயர் காரணம்
"குறும்பலா " என்பது வேர்ப்பலா; அந்த பலா மரம் குற்றாலத்தில் உள்ளது 'அந்த குற்றால பூமி, குறும்பலாப்பேரி குளத்தில் கரையில் இன்னும் உள்ளது. அங்கு அந்த மரம் பழங்காலத்தில் இந்திருக்கிறது; அதனால் குறும்பலா என்றும்; பேரி என்பது சங்க காலத்தில் மருத நிலத்தை குறிக்கும் சொல்; குறும்பலாப்பேரியும் நிலமும் நெல்லும் விளையும் பூமி:; எனவே"குறும்பலாப்பேரி" என்ற பெயர் வந்தது.

வாழ்க்கை மேற் காதல் வாருங்கள் நண்பர்களே ,
வாழ்க்கை மீது காதல் கொள்ளுவோம் . அன்புத் தேனை அகத்தில் நுகர்ந்தே இன்பப் பெருக்கில் எக்களித் திடுவோம் . வாழ்க்கை நங்கையை விரட்டிப் பிடித்து முரட்டுக் கைகளால் மூலையில் தள்ளிக் காம நகங்களால் கறைப்படுத் தாமல் யாழென மடிமேல் இனிது தழுவி மெல்லிய விரல்களால் மீட்டுவோம் வாரீர் . ஊதியப் பிடியில் உள் இறுகாமல் காதல் நெஞ்சில் கனிந்திடுமாயின் சருகும் தளிர்க்கும் ; சாம்பலும் உயிர்பெறும் ; பிறகேன் தயக்கம் ? பெயர்ந்து வாருங்கள் ! வாழ்க்கை மலர்மேல் வண்டிருந்து ஊதும் புல்லாங் குழலின் மெல்லிய ஓசையில் நெஞ்சும் செவிகளும் நிரம்பித் ததும்பி நெகிழ்ந்து நிற்கலாம் . நரம்புகள் யாழாய் நடஞ் செய்யட்டும் ! புல்லும் பூச்சியும் புழுக்களும் போல மண்ணைத் தின்று மழுங்கி விடாமல் வண்ணப் பூச்சிபோல் மலர்ப்பொடி அருந்தி விண்ணொளி தேடிச் சிறகுகள் விரிப்போம் . பந்தயக் களங்களின் பரிவட்டங்கட்காய் வெந்து புழுங்கி வீணாகாமல் சந்தனச் சோலையின் நறுமணம் நுகர்ந்தே அந்தந்த நொடியின் அழகில் திளைப்போம் . அலுவல் செக்கினை ஆட்டி நாள்தோறும் வட்டம் சுழன்றதில் வாழ்க்கையே மறந்து போய் எக்கி எக்கி இழுப்பினும் முன்செலாச் செக்கு மாட்டுளத்தை அடித்தடித்து எழுப்பிக் களைத்துப் போன கவலையை மறக்க இருட்டுப் புணர்ச்சியில் இரு நொடி விழுந்தெழும் அரை குறை வாழ்வை அருவருத்திடுவோம் . ஒவ்வொரு நொடியும் உள்விதுப் புறவும் ஒவ்வொரு கணமும் உயிர்பிணைந்து உவக்கவும் காணும் பொழுதும் , கருதும் பொழுதும்
-------------------------------------2---------------------------